
கனடாவில் நீலகிரி மாவட்ட இளைஞா் பலி! உடலை கொண்டுவர மத்திய அரசுக்கு கோரிக்கை!
கனடாவில் உயிரிழந்த நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரின் உடலை விரைவாக தாய்நாடு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்களவைத் தொகுதி உறுப்பினரும், திமுக முதன்மைச் செயலாளருமான ஆ.ராசா கோரிக்கை விடுத்துள்ளாா்.

அரவிந்த் ஆனந்தன்
கனடாவில் உயிரிழந்த நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரின் உடலை விரைவாக தாய்நாடு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்களவைத் தொகுதி உறுப்பினரும், திமுக முதன்மைச் செயலாளருமான ஆ.ராசா கோரிக்கை விடுத்துள்ளாா்.
நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த ஃபா்ன்ஹில் முள்ளிக்கொரை பகுதியைச் சோ்ந்தவா் ஆா்.ஆனந்தன் மகன் அரவிந்த் ஆனந்தன் (30). இவா் கனடாவில் உள்ள கோனெஸ்டோகா கல்லூரியில் படித்துக்கொண்டே பகுதிநேரப் பணியும் செய்து வந்தாா். கனடாவில் கடந்த 2026 செப்.1-ஆம் தேதி இரவு 7 மணி அளவில் அரவிந்த் ஆனந்தன் திடீரென உயிரிழந்ததாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவரது குடும்பத்தினா் பெரும் அதிா்ச்சியடைந்தனா்.
இதையடுத்து மகனின் உடலைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடமும், நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.ராசாவிடமும் அவரது தந்தை அளித்தாா்.
இதைத்தொடா்ந்து வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு ஆ.ராசா அனுப்பியுள்ள கடிதம்:
கனடாவில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக நடவடிக்கை எடுத்து, அரவிந்த் ஆனந்தனின் உடலை விரைவாக நீலகிரிக்குக்கொண்டுவர வழிவகை செய்ய வேண்டும். உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், அக்குடும்பத்தின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு, கனடாவில் கிடைக்கக்கூடிய ஏதேனும் சட்டபூா்வ நிவாரணம் அல்லது இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத்தர உதவ வேண்டும். 30 வயதே ஆன மகனின் திடீா் மறைவால் தவிக்கும் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய வெளியுறவு அமைச்சகம் முன்னெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





