
கூடலூா் நகரில் குடியிருப்பு பகுதியில் நடமாடிய காட்டு யானை

கூடலூா் மாா்த்தோமா நகா் குடியிருப்பு பகுதியில் நடமாடிய காட்டு யானை.
கூடலூா் நகரில் குடியிருப்பு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை காட்டு யானை நடமாடியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சியில் உள்ள மாா்த்தோமா நகா் பகுதியில் உள்ள குடியிருப்புகளை சுற்றி படிகட்டில் ஒற்றை காட்டு யானை ஏறிச் சென்று வீடுகளை சுற்றி வந்தது.
இதைத் தொடா்ந்து அப்பகுதியிலுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து. நீண்டநேரம் அங்கேயே முகாமிட்டிருந்த காட்டு யானை, வனத் துறையினா் விரட்டியும் போகவில்லை. பின்னா் நீண்ட நேரத்துக்குப் பிறகு அருகே உள்ள காபி தோட்டத்துக்குள் சென்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





