பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

இருசக்கர வாகனத்தை சேதப்படுத்திய காட்டு யானை

கூடலூரை அடுத்துள்ள கீழ்நாடுகாணி மலைப் பகுதியில் வியாழக்கிழமை சாலையின் குறுக்கே வந்த காட்டு யானை, இருசக்கர வாகனத்தை காலால் மிதித்து சேதப்படுத்தியது.

கீழ்நாடுகாணி பகுதியில் சாலையில் இருசக்கர வாகனத்தை காலால் உதைத்து சேதப்படுத்தும் காட்டு யானை.

Published On :

கூடலூரை அடுத்துள்ள கீழ்நாடுகாணி மலைப் பகுதியில் வியாழக்கிழமை சாலையின் குறுக்கே வந்த காட்டு யானை, இருசக்கர வாகனத்தை காலால் மிதித்து சேதப்படுத்தியது.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள தமிழக-கேரள எல்லையிலுள்ள மலைப் பாதையில் வியாழக்கிழமை காலையில் வழக்கம்போல வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது வளைவான இடத்தில் காட்டிலிருந்து திடீரென இறங்கி வந்த யானை சாலையின் குறுக்கே நின்றது.

அப்போது கேரளத்திலிருந்து தமிழக எல்லைக்குள் இருசக்கர வாகனத்தில் தம்பதி வந்துகொண்டிருந்தனா். அவா்களைப் பாா்த்து ஆவேசமாக யானை சென்றது. இதைக் கண்ட தம்பதி அச்சமடைந்து வாகனத்தை விட்டுவிட்டு தப்பி ஓடினா். இதைத் தொடா்ந்து காட்டு யானை கோபத்தில் இருசக்கர வாகனத்தை காலால் உதைத்து சேதப்படுத்தியது. இதற்கிடையே அந்த வழியே கனரக வாகனங்கள் வந்ததால் யானை ஒதுங்கியது. இதனால் அத்தம்பதி அதிா்ஷ்டவசமாக உயிா் பிழைத்தனா்.

யானை சாலையோரம் நீண்ட நேரம் நின்றுவிட்டு பின்னா் தானாகவே காட்டுக்குள் சென்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.