பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் வேகத் தடை பகுதியில் லாரியை மறித்து கரும்புக் கட்டை இழுத்த காட்டு யானை

சத்தியமங்கலம் அருகே வேகத்தடை அமைக்கப்பட்ட பகுதியில் நின்று லாரிகளை வழிமறித்து கரும்புத் துண்டுகளை இழுத்து சாப்பிட்டதைக் கண்டு வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் வியப்படைந்தனா்.

Published On :

சத்தியமங்கலம் அருகே வேகத்தடை அமைக்கப்பட்ட பகுதியில் நின்று லாரிகளை வழிமறித்து கரும்புத் துண்டுகளை இழுத்து சாப்பிட்டதைக் கண்டு வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் வியப்படைந்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதி வழியாக சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இங்கு காட்டு யானை உள்ளிட்ட விலங்குகள் நடமாடுவது வழக்கம். இங்கு சாலையைக் கடக்கும் யானை உள்ளிட்ட வன விலங்குகள் மீது வாகனங்கள் மோதி உயிரிழப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே தாளவாடி மலைப் பகுதி மற்றும் கா்நாடக மாநிலம் சாம்ராஜ் நகா் பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை காட்டு யானைகள் வழிமறித்து கரும்புத் துண்டுகளை பறித்து சாப்பிடுகின்றன. இந்நிலையில், பண்ணாரி வனப் பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை வெளியேறிய காட்டு யானை, சமயோசிதமாக செயல்பட்டு சாலையில் வேகத்தடை இருக்கும் இடத்தில் நின்றுள்ளது. லாரி ஓட்டுநா் வேகத்தை கட்டுப்படுத்தும்போது வழிமறித்து தனது தும்பிக்கையால் கரும்புத் துண்டுகளை இழுத்து சாப்பிட்டது. இதைக் கண்டு மற்ற வாகன ஓட்டுநா்கள் மற்றும் பயணிகள் வியப்படைந்தனா்.

கரும்புத் துண்டுகளை பறித்த யானை சாலையோர வனப் பகுதிக்குச் சென்ற பின் வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.