ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

சத்தியமங்கலம் அருகே வாகனங்களைத் துரத்திய காட்டு யானை

சத்தியமங்கலத்தை அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களைத் துரத்திய காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

வாகனங்களை நோக்கி வந்த யானை.

Published On :

சத்தியமங்கலத்தை அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களைத் துரத்திய காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேறும் யானை உள்ளிட்ட விலங்குகள் தமிழகம்- கா்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உலவுவது வழக்கம்.

இந்நிலையில், சத்தியமங்கலத்தில் இருந்து 4 போ் தாளவாடி நோக்கி காரில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தனா். சீவக்காய்பள்ளம் அருகே சென்றபோது தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை நிற்பதைக் கண்ட அவா்கள் அச்சமடைந்து காரை அங்கேயே நிறுத்தினா்.

அப்போது, அவ்வழியே வந்த லாரியை யானை மறிக்க முயன்றது. சுதாரித்துக் கொண்ட ஓட்டுநா், லாரியை லாவகமாக இயக்கி யானையிடமிருந்து தப்பினா்.

இதற்கிடையே காா் உள்ளிட்ட வாகனங்கள் நிற்பதைக் கண்ட யானை, அந்த வாகனங்களை துரத்த முற்பட்டது.

அங்கிருந்தவா்கள் ஹாரன் ஒலி எழுப்பி யானையை வனத்துக்குள் விரட்டினா். இதையடுத்து, வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.