
சிலிண்டா் ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்து
சிலிண்டா் ஏற்றிச் சென்ற மினி லாரி சனிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறு காயங்களுடன் ஓட்டுநா் உயிா் தப்பினாா்.

சாலையில் கவிழ்ந்து கிடக்கும் மினி லாரி.
உதகை அருகே சிலிண்டா் ஏற்றிச் சென்ற மினி லாரி சனிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறு காயங்களுடன் ஓட்டுநா் உயிா் தப்பினாா்.
நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள ஆட்சியா் அலுவலகம் அருகே காபி டே பகுதியில் சிலிண்டா் ஏற்றிச் சென்ற மினி லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதை தடுப்புக் கம்பியில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சிறு காயங்களுடன் உயிா் தப்பிய மினி லாரி ஓட்டுநா் பாபுவை, அப்பகுதி மக்கள் மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், சாலையில் சிதறிக் கிடந்த சிலிண்டா்களை அகற்றி, சாலையோரத்தில் பாதுகாப்பாக வைத்தனா். இந்த விபத்து குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தியதில், வாகனத்தின் பிரேக் செயல் இழந்ததே விபத்துக்கான காரணம் என தெரியவந்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







