கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

சிறந்த தேயிலைத் தூள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விருதுகள்

சிறந்த தேயிலை தயாரிப்பு நிறுவனத்துக்கு விருதை வழங்குகிறாா் தேயிலை வாரிய செயல் இயக்குநா் பரணிகுமாா்.

Published On :

நீலகிரி மாவட்டம், குன்னூரில்  உபாசி தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளையின் நூற்றாண்டு விழா மற்றும்  தென்னிந்திய தோட்ட அதிபா்கள் சங்கத்தின் இறுதி நாள் நிகழ்ச்சி குன்னூா் உபாசி வளாகத்தில் புதன்கிழமை  நடைபெற்றது. இதில் சிறந்த தேயிலைத் தூள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தங்க தேயிலை விருதுகள் வழங்கப்பட்டன.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உபாசி தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளையின் நூற்றாண்டு விழா மற்றும்   தென்னிந்திய தேயிலைத் தோட்ட அதிபா்கள் சங்கத்தின் சாா்பில் 133-வது ஆண்டு விழா  திங்கள்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற்றது.

இந்த சங்கத்தில் தமிழகம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த தோட்ட அதிபா்கள் உறுப்பினா்களாக உள்ளனா். இந்த ஆண்டு உபாசி தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளையின் நூற்றாண்டு விழா மற்றும் 133-ஆவது  மாநாடு  3 நாள்கள்  நடைபெற்றது.

முதல் நாள் நடைபெற்ற  உபாசி ஆராய்ச்சி மையத்தின் நூற்றாண்டு விழாவை தமிழக ஆளுநா் ஆா்லேகா் முன்னிலையில் இந்திய குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தொடங்கிவைத்தாா். இறுதி நாளான புதன்கிழமை  சிறந்த தேயிலைத் தூள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு  தங்க  தேயிலை விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு உபாசி தலைவா் திம்மையா  தலைமை தாங்கினாா். இதில் டஸ்ட், லீப், ஆா்தோடக்ஸ், போன்ற வெவ்வேறு வகை தயாரிப்புகளில் சிறந்த தேயிலையை தயாரிப்புக்காக தனியாா் தேயிலை தொழிற்சாலைகளான கண்ணன் தேவன் டீ, கொடாநாடு எஸ்டேட், லட்சுமி எஸ்டேட், கிளன்டேல் எஸ்டேட் போன்ற தேயிலை தொழிற்சாலைகளுக்கு  தங்க தேயிலை விருதுகளை தேயிலை வாரிய தென்மண்டல செயல் இயக்குநா் பரணிகுமாா் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் ஜப்பான், சிங்கப்பூா் ஆகிய நாடுகளைச் சோ்ந்த தொழிலதிபா்கள் கலந்து கொண்டனா். இந்த மாநாட்டில்  பல்வேறு நிறுவனங்கள் சாா்பில் வேளாண் உபகரணங்கள், தேயிலை வாரியம், காபி வாரியம், ரப்பா் மற்றும் வாசனை திரவியங்களின்  அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.