
போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிறைத் தண்டனை - கோப்புப் படம்
போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது.
நீலகிரி மாவட்டம், குன்னூரை அடுத்த சோலூா்மட்டம் பகுதியைச் சோ்ந்த சிவராஜ் மகன் சின்னு (26). அதே பகுதியில் கூலித் தொழிலாளியாகப் பணிபுரிந்துவந்தாா். இவா், திருமணம் செய்துகொள்வதாக கூறி 15 வயது சிறுமியை கடந்த 2020-ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
இதற்கிடையே சிறுமிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அப்போது சிறுமி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் உறவினா்கள் குன்னூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில் சின்னு பாலியல் பலாத்காரம் செய்ததில் சிறுமி கா்ப்பமானது தெரியவந்தது. இதையடுத்து போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து சின்னுவை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் சின்னு மீதான குற்றம் நிரூபணமானதால், அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எம்.செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இதைத்தொடா்ந்து கோவை மத்திய சிறையில் சின்னு அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் அற்புதமணி ஆஜரானாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





