நூல் விலை உயர்வு காரணமாக பின்னலாடைத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக திங்கள்கிழமை(மே 13) நடைபெற இருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து பின்னலாடை உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்களும் பங்கேற்குமாறு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் சங்க(டீமா) தலைவர் எம்.பி.முத்துரத்தினம் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நூல் உற்பத்தியாளர்களிடம் நூல் விலையை நிர்ணயம் செய்யக் கோரியும், நூல் விலை உயர்வு காரணமாக பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் விவாதிக்க ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டம் பி.என்.சாலை சாந்தி திரையரங்கம் அருகில் உள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில், அனைத்து பின்னலாடை உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்களுக்கும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அப்படீங்களா!
பேல்பூரி

கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு! | TVK

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


