பாதாளச் சாக்கடைப் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
உடுமலை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடைப் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடுமலை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடைப் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடுமலை வட்டார உடல் உழைப்புத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு சங்கத் தலைவர் எம்.குணசேகரன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் எம்.மூர்த்தி முன்னிலை வகித்தார்.
இதில், உடுமலை நகரில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடைப் பணிகளால் சாலைகள் மிக மோசமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்தப் பணிகளை விரைந்து முடிக்கக்கோரி செப்டம்பர் 25-ஆம் தேதி பிரசார இயக்கம் நடத்துவது, அமைப்பு சாரா கட்டுமானத் தொழிலாளர் வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகைகளை அதிகரிக்க வலியுறுத்தி அக்டோபர் 31-ஆம் தேதி மாநாடு நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

