உடுமலையில் பிரசார இயக்கம்
உடுமலை நகரில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடை பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரசார இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உடுமலை நகரில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடை பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரசார இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உடுமலை வட்டார உடல் உழைப்புத் தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த பிரசார இயக்கத்திற்கு, அதன் தலைவர் எம்.குணசேகரன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் எம்.மூர்த்தி முன்னிலை வகித்தார்.
உடுமலை நகரில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடை பணி களால் சாலைகள் மிக மோசமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த பணிகளை விரைவில் முடிக்க வேண்டுமென இப்பிரசாரத்தில் வலியுறுத்தப்பட்டது. நகரின் முக்கிய பகுதிகளில் இந்த பிரசாரம் நடைபெற்றது. நிர்வாகிகள் ஜி.செல்வராஜ், எம்.ஈஸ்வரன், டி.ராக்கியண்ணன், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

