
கார் மோதி மின்வாரிய ஊழியர் சாவு
தெக்கலூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் மின்வாரிய ஊழியர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
தெக்கலூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் மின்வாரிய ஊழியர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
பவானி, சின்னக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (42). இவர், சத்தியமங்கலத்தில் மின்வாரிய ஊழியராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் முருகேசன் அவிநாசியில் இருந்து கோவை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். தெக்கலூர் அருகே, புறவழிச்சாலையில் அவர் சென்றபோது, அவிநாசியில் இருந்து கோவை நோக்கி சென்ற கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, அவிநாசி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





