பெருமாநல்லூர் அருகே கார் - வேன் விபத்துக்குள்ளானதில் இளைஞர் புதன்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார். மேலும், 5 பேர் பலத்த காயமடைந்தனர்.
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி, காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த பாபு மகன் மதுசூதனன் (25). இவர், கோவையிலிருந்து ஈரோடு நோக்கி தனது உறவினர்களுடன் காரில் வந்துகொண்டிருந்தார்.
அவர்களது கார் பெருமாநல்லூர் அருகே, காளிபாளையம் பிரிவு அருகே வந்தபோது பழுதானது. இதையடுத்து, பெருந்துறையைச் சேர்ந்த நேசையன் மகன் ராஜுவை வரவழைத்து பழுதான காரை மற்றொரு வேனில் கட்டி இழுத்துச் செல்ல முயன்றுள்ளனர்.
அப்போது, கோவையிலிருந்து ஈரோடு நோக்கி வேகமாக வந்த லாரி, மதுசூதனனின் கார் மீது மோதியது. இதில், மதுசூதனன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கு நின்று கொண்டிருந்த கோவை, செல்வபுரம், சபாபதி மகன் ராஜேந்திரன் (54), ஈரோடு சி.எஸ்.ஐ. காலனியைச் சேர்ந்த நேசக்குமார் (33), பெருந்துறையைச் சேர்ந்த ராஜு (46), முத்துசாமி நகர் கோவிந்தராஜ் மகன் துரைராஜ்(55), பாலன் மகன் பிரகாஷ் (36) ஆகிய 5 பேரும் பலத்த காயமடைந்தனர்.
இவர்கள் அனைவரும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து, பெருமாநல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநர் விஷ்ணுவைக் கைது செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராஜஸ்தானை புரட்டிப்போட்ட கனமழை: ஜலாவாரில் 300 மி.மீ மழை!

த்ரிஷா வீட்டில் மற்றொரு பிறந்தநாள் கொண்டாட்டம்! அதே நீலக்கண்! யாருக்கு?

முத்தரப்பு டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!

வேலை இல்லை என்பதால் பிக் பாஸ் சென்றேன்: திவ்யா கணேசன்
விடியோக்கள்

உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கு! Udhayanidhi Vs N Anand! | TN Assembly


