திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

சிதிலமடைந்த நிலையில் அரசுப் பள்ளி மேற்கூரை: அச்சத்தில் மாணவர்கள்

திருப்பூரில் 92 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில் செயல்படும் நடுநிலைப் பள்ளியின் மேற்கூரை தற்போது மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அங்கு மாணவர்கள் அச்சத்துடனேயே படித்து வருகின்றனர்.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

திருப்பூரில் 92 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில் செயல்படும் நடுநிலைப் பள்ளியின் மேற்கூரை தற்போது மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அங்கு மாணவர்கள் அச்சத்துடனேயே படித்து வருகின்றனர்.

திருப்பூர், அவிநாசி சாலை மற்றும் கல்லூரிச் சாலை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது தேவாங்கபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி. இங்கு 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்தப் பள்ளியில் உள்ள கட்டடங்கள் 1924-ஆம் ஆண்டில் கட்டப்பட்டவையாகும். இதில், மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்த ஒரு கட்டடத்தின் மேற்கூரை புதுப்பிக்கப்பட்டது. ஆனால், மற்றொரு கட்டடம் புதுப்பிக்கப்படாமல் விடப்பட்டு விட்டது.

இந்நிலையில், தற்போது அந்தக் கட்டடம் மிகவும் சிதிலமடைந்து, மேற்கூரை மரச் சட்டங்கள், ஓடுகள் உடைந்தும் உள்ளன. மேலும் கட்டடத்தின் பக்கவாட்டுச் சுவர்களும் சேதமடைந்துள்ளன. மின் இணைப்புகள் உரிய பாதுகாப்பு இன்றி ஆபத்தான நிலையில் உள்ளன.

பலத்த மழை பெய்தால் மேற்கூரை கீழே விழும் நிலையில் உள்ளது. மேலும், ஓடுகள் எப்போதும் வேண்டுமானாலும் மாணவர்கள் தலையில் விழும் அபாயம் உள்ளது.

இந்தக் கட்டடத்தில் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்பறைகள் உள்ளன. மேலும் முதல் 3 வகுப்புகளுக்கான ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளும் அங்கேயே உள்ளன. இதனால் மாணவர்கள் எப்போதும் அச்சத்துடனேயே கல்வி கற்கும் சூழல் நிலவி வருகிறது.

இதுகுறித்து, மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:

அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்களின் வருகை குறைந்து வரும் நிலையில் இதுபோன்ற பாதுகாப்பற்ற சூழல் அரசுப் பள்ளிகளில் குழந்தைகளின் வருகையை மேலும் குறைத்து விடும். இது மாநகராட்சிப் பள்ளி என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் இருக்கும் மேற்கூரையை விரைவில் புதுப்பிக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து, பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறுகையில், "ஏற்கெனவே ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பள்ளி நுழைவாயில், சுற்றுச் சுவர், ஒரு கட்டடத்துக்கு மேற்கூரை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சிதிலமடைந்துள்ள கட்டடத்தின் மேற்கூரை விரைவில் சீரமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான செயல்பாடுகள் எந்த நிலையில் தற்போது உள்ளன என்பது தெரியாது' என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.