மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

திருப்பூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசாணையாக வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் அரசு ஊழியர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசாணையாக வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் அரசு ஊழியர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.சுசிலா தலைமை வகித்தார். இதில், தமிழக அரசு சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்த அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசாணைகளாக உடனடியாக வெளியிட வேண்டும். பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் நடைபெற்ற காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்ட காலத்தைப் பணிக் காலமாகக் கணக்கிட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தின்போது பிடிக்கப்பட்ட பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், அங்கன்வாடி ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் விஜயலட்சுமி, மாநிலப் பொருளாளர் பாக்கியம், சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் கே.பால்ராஜ், மாநில துணைத் தலைவர் எஸ்.முருகேசன், சிஐடியூ மாவட்டப் பொதுச் செயலாளர் சந்திரன், அரசு ஊழியர்கள் சங்க வடக்குக் கிளைத் தலைவர் மூர்த்தி, மாவட்டச் செயலாளர் அம்சராஜ், மாவட்டத் தலைவர் பாஸ்கரன் உள்பட திரளான அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.