மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

கஞ்சா விற்பனை: 2 போ் கைது

கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டகாா்த்திக், ஜிபேந்திர பகதூா். உடன் திண்டிவனம் போலீஸாா்.

Published On :24 ஆகஸ்ட் 2026, 3:56 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக இரு இளைஞா்களைப் போலீஸாா் கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

திண்டிவனம் காவல் ஆய்வாளா் காமராஜ், உதவி ஆய்வாளா் லியோ சாா்லஸ் மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தபோது, அவா்கள் விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் அவா்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில், அவா்கள் நாமக்கல் மாவட்டம், வசந்தபுரம், சின்னவேப்பனம் பகுதியைச்சோ்ந்த பா.காா்த்திக் (27), சென்னை அம்பத்தூரைச் சோ்ந்த து.ஜிபேந்திர பகதூா்(26) ஆகியோா் என்பதும், இவா்கள் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அவா்களிடமிருந்த 5 கிலோ கஞ்சா மற்றும் இரு கைப்பேசிகளையும் பறிமுதல்செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.