ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கோயில் நிலத்தில் தனியார் பால் நிறுவனக் கட்டுமானப் பணி:இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை

ஊதியூர் அருகே கோயில் நிலத்தில் தனியார் பால் நிறுவனம் மேற்கொண்ட கட்டுமானப் பணிகள் இந்து சமய அறநிலையத் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு, அந்த இடத்தில் எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 12:28 am

DIN

ஊதியூர் அருகே கோயில் நிலத்தில் தனியார் பால் நிறுவனம் மேற்கொண்ட கட்டுமானப் பணிகள் இந்து சமய அறநிலையத் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு, அந்த இடத்தில் எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம்,  காங்கயத்தை அடுத்த  ஊதியூரில் பிரசித்தி பெற்ற உத்தண்ட வேலாயுத சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு ஊதியூர்  சுற்றுப்புறப் பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. இந்தக் கோயில் நிலங்களில் குத்தகை அடிப்படையில் விவசாயிகள் விவசாயம் செய்து வந்துள்ளனர்.  காலப்போக்கில் சிலர், அந்த நிலங்களுக்கு போலிப் பட்டா பெற்று விற்பனை செய்துவிட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், ஊதியூர் மலையடிவாரத்தில், குண்டடம் சாலையை ஒட்டியுள்ள பகுதியில் கோயிலுக்குச் சொந்தமான 95 ஏக்கர் நிலத்தை தனியார் பால் நிறுவனத்தினர் விலைக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த இடத்தில் கடந்த ஜனவரியில் கட்டுமானப் பணியை அந்நிறுவனம் தொடங்கியது. பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டடப் பணிகள் நடைபெற்று வந்தன.  தனியார் பால் நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெறும் நிலம், உத்தண்ட வேலாயுத சுவாமி கோயிலுக்குச்  சொந்தமானது எனப் புகார்கள் எழுந்தன.
அதையடுத்து, கடந்த சில நாள்களுக்கு முன் சிவன்மலை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் கண்ணதாசன் உள்ளிட்ட அதிகாரிகள் அந்த இடத்தை  ஆய்வு செய்து,  கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில்,  அந்த இடத்தில் தற்போது இந்து சமய அறநிலையத் துறை சார்பில் எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டுள்ளது.  
"ஊதியூர் தேவதாய கிராம இனாம் 1590.37 நிலங்களின் மேல்வாரம் (உரிமை  மூலம் சொத்துரிமை), குடிவாரம் (உழவடை பாத்தியம் குத்தகை உரிமை) இரண்டு உரிமைகளும் கோயில்களுடையது.
இதனை அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்வோர் மீது பிணையில் வர முடியாத குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று அந்த எச்சரிக்கைப் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.