மறைந்த எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமிக்கு நினைவேந்தல் கூட் டம் உடுமலையில் புதன்கிழமை நடைபெற்றது.
உடுமலை தளி சாலையில் உள்ள முதல் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் நூலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு அந்த அமைப்பின் தலைவர் க. லெனின்பாரதி தலைமை வகித்தார். நூலகர் ந.அபிராமசுநதரி முன்னிலை வகித்தார். இதில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எழுத்தாளர்கள் சுபாஷ் கிருஷ்ணசாமி, சிவசக்தி ராமசாமி, தோழன் ராஜா ஆகியோர் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமிக்கு நினைவேந்தல் உரையாற்றினர். நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் கே.விஜயகுமார், எஸ்.சண்முக சுந்தரம், என்.சம்பத்குமார், பி.வேலாயுதம் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள், கலை இலக்கிய அமைப்புக்களின் நிர்வாகிகள் என பலர் பங்கேற்றனர். அப்துல் கலாம் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.