ஆளுநரின் பணி பாராட்டுக்குரியது
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் பணி பாராட்டுக்குரியது என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.


ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் பணி பாராட்டுக்குரியது என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
இந்து மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அமைப்பின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த இரு நாள்களாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மேற்கொண்ட பணி மிகவும் பாராட்டுக்குரியது. கோவை மட்டுமல்லாது மாநிலம் முழுவதும் இதுபோன்ற ஆய்வுகளை அவர் மேற்கொள்ள வேண்டும். தமிழகம் முன்னேற வேண்டுமெனில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால் மட்டுமே முடியும். இதனை அரசியல் கட்சியினர் எதிர்ப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் போலி ஆவணங்களைக் கொடுத்து பலர் அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர். இதனால் தாழ்த்தப்பட்ட, பின்தங்கிய வகுப்பு மக்களின் இட ஒதுக்கீடு பாதிக்கப்படுகிறது. தமிழக அரசு இதன் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...