ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பிரதம மந்திரி  பயிர்க் காப்பீட்டு திட்ட முகாம்

மூலனூர் அருகே பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 2:12 am

DIN

மூலனூர் அருகே பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
நஞ்சைதலையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு,  வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ரா.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.
வேளாண்மை அலுவலர் மாரிமுத்து, துணை அலுவலர் பாரிவள்ளல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில்,  பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து மழை, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் பயிர் இழப்பு அல்லது மகசூல் இழப்பு ஏற்படும் சமயத்தில் விவசாயிகள் தங்களைப் பாதுகாத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
முகாமில் உதவி வேளாண்மை அலுவலர் குமார், கோபியைச் சேர்ந்த வேளாண் கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.