விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மது பாட்டில்களை விற்பனைக்கு கொண்டு சென்றவர் கைது

அவிநாசி அருகே டாஸ்மாக் கடைகளில் இருந்து மது பாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 10:31 pm

DIN

அவிநாசி அருகே டாஸ்மாக் கடைகளில் இருந்து மது பாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
மாவட்ட  மதுவிலக்கு ஏடிஎஸ்பி குணசேகரன் உத்தரவின்பேரில்,  அவிநாசி மதுவிலக்கு போலீஸார்,  அவிநாசி -கோவை  சாலை,  நாதம்பாளையம் பிரிவில் வாகனத் தணிக்கையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனர். 
அப்போது அவ்வழியாக வந்த காரை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். இதில், காருக்குள் அதிக அளவில்  மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. 
விசாரணையில்,  காரை ஓட்டி வந்தவர் ராஜபாளையத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் விநாயகமூர்த்தி (33) என்பதும்,  இவர் வெளியூரிலிருந்து டாஸ்மார்க் மது பாட்டில்களை வாங்கி வந்து,  இருப்பு வைத்து,  கருமத்தம்பட்டியில் தான் நடத்திவரும் உணவகத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து மதுவிலக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விநாயகமூர்த்தியைக் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து கார்,  434 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.