வெள்ளக்கோவிலில் ரூ. 20 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை ரூ. 20 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.
Updated on
1 min read

வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை ரூ. 20 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு மொத்தம் 494 மூட்டைகள் கொப்பரையை விவசாயிகள் கொண்டுவந்திருந்தனர். இதன் மொத்த எடை 23 ஆயிரம் கிலோ.
உள்ளூர் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் 100 உழவர்கள் கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். 9 வணிகர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றனர்.
இதில், அதிகபட்சமாக கிலோ ரூ. 114.25-க்கும், குறைந்தபட்சமாக  ரூ. 60.65-க்கு விற்பனையானது. மொத்தம் ரூ. 20 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றதாக விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர் சி.மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com