தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

திருப்பூர், அவிநாசி  ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :5 ஏப்ரல் 2018, 7:00 am IST

திருப்பூர், அவிநாசி  ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். 
இதில், ஊராட்சிப் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், பொது மக்களிடம் கழிப்பறைகள் கட்டுவதன் அவசியம் குறித்த  விழிப்புணர்வு ஏற்பத்திடவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து, பிரதமரின் வீடு கட்டும் திட்டம், தமிழக முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் ஆகிய பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், வரும் கோடைக் காலத்தில் பொது மக்களுக்கு எவ்விதத் தடையும் இன்றி குடிநீர் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளவும், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துச் செயல்பட வேண்டும் எனவும் அனைத்து அரசுத் துறை  அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார். 
மேலும், பொங்குபாளையம் ஊராட்சி, கூட்டுறவு நகரில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அம்மா உடற்பயிற்சி நிலையம், அம்மாபூங்கா அமைக்கும் பணியையும் நேரில் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், செயற்பொறியாளர், செல்வகுமரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்),  பாலசுப்பிரமணியன், உதவித் திட்ட அலுவலர்கள்  ராணி,  அம்பிகா, உதவிச் செயற்பொறியாளர்கள் தனபால், சிவநாத், திருப்பூர், அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும்  அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.