திருப்பூரில் இளைஞர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர், மங்கலம் சாலை, பாரதி நகர் பகுதியிலுள்ள முள்புதரில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த லோகநாதன் (24) என்பவர் கழுத்தறுத்து சனிக்கிழமை கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் இக்கொலை தொடர்பாக கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன்,பெருமாள் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
கரூர் மாவட்டத்தை சேர்ந்த லோகநாதன், அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மனைவி நளினி என்பவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, திருப்பூர் பாரதி நகர் பகுதியில் உள்ள சகோதரர் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இதையறிந்த நளினியின் கணவர் முருகன், அவரது உறவினர் பெருமாள் ஆகியோர் திருப்பூர் வந்து நளினியை திருமணம் செய்து வைப்பதாக கூறி லோகநாதனை தனியாக அழைத்து சென்று கழுத்தை அறுத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, திருப்பூர் கோவில் வழி பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, முருகன், பெருமாள் ஆகியோரை பிடித்தனர். இதைத் தொடர்ந்து முருகன்(எ) முருகானந்தம், பெருமாள் ஆகியோரை தெற்கு போலீஸார் கைது செய்தனர் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அல்கராஸ், சின்னா், ஸ்வெரெவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

தனி முன்னிலையுடன் வைஷாலி அசத்தல்: திவ்யா, பிரக்ஞானந்தா மீண்டும் சறுக்கல்

சூா்யவன்ஷி, ஜுரெல் விளாசல்; 4-ஆவது வெற்றியுடன் ராஜஸ்தான் ஆதிக்கம்
கொள்கையில்லாத கூட்டணிகள்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

