வெள்ளக்கோவிலில் அரசு மதுபானக் கடை அருகே முதியவர் இறந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
காங்கயம் சாலை, இரட்டைக்கிணறு பகுதிக்கு அருகே அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடைக்கு சனிக்கிழமை இரவு மது அருந்த வந்த முதியவர் போதையில் அங்கேயே படுத்துக் கிடந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ஊழியர்கள் கடையைப் பூட்டிச் சென்றுவிட்டு, மீண்டும் ஞாயிற்றுக்கிழமை கடையை திறக்க வந்தபோது முதியவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இறந்தவர் வயது சுமார் 65 இருக்கலாம். உடலில் ஆங்காங்கே இலேசான சிராய்ப்புக் காயங்கள் இருந்தன. இறந்தவர் பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை. தற்போது சடலம் கோவை அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு ரூ.12 லட்சம் அபராதம்!

ராஜஸ்தானில் அம்பேத்கர் சிலை சேதம்: மக்கள் போராட்டம்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்ததா?
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

