திருப்பூர், கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் பல்லடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத் தலைவர் இரா.வேலுசாமி தலைமை வகித்தார். செயலாளர் அப்புக்குட்டி என்ற பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் பாலாஜி, முத்துக்குமார் ஆகியோர் வரவேற்றனர்.
கூலி உயர்வு தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஒப்பந்தப்படி ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலியை வழங்க ஒப்புக்கொள்ளாவிடில் திருப்பூர், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து விசைத்தறிகளையும் நிறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் விசைத்தறியாளர்கள் கரைப்புதூர் ராஜேந்திரன், ஆறுக்குட்டி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். சக்திவேல் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிடானேரி சமத்துவபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்
அஸ்ஸாம் முதல்வா் கருத்து: இந்திய தூதருக்கு வங்கதேசம் சம்மன்!

மது விற்றதாக இளைஞா் கைது

நீா்நிலை மீது கட்டப்பட்ட வணிக வளாகத்தை அகற்றக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

