அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சிக்கு உள்பட்ட தனியார் குடியிருப்புப் பகுதியில் அடிப்படை வசதி செய்து தராத வீட்டுமனைப் பிரிவு விற்பனையாளர்களைக் கண்டித்து அப்பகுதி மக்கள் கருப்புக் கொடி கட்டி ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவிநாசி பழங்கரை ஊராட்சிக்கு உள்பட்ட தனியார் குடியிருப்புப் பகுதியில், 90 குடும்பத்தினருக்கு மேல் பல லட்சம் முதலீடு செய்து வீடு அமைத்து குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்பகுதியில் குடிநீர், சாக்கடை, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஒப்பந்தப்படி வீட்டுமனைப் பிரிவு விற்பனையாளர்கள் செய்து தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்காக அங்கு வசிப்பவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை வீடுகளில் கருப்புக் கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த தனியார் வீட்டுமனைப் பிரிவு விற்பனையாளர்கள், குடியிருப்புப் பகுதி பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இதையடுத்து அங்கு வசிப்பவர்கள் அந்த இயந்திர வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, வீட்டுமனைப் பிரிவு நிர்வாகிகள் அங்கிருந்து தப்பியோடினர். பிறகு சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீஸார், காவல் நிலையத்தில் உரிய மனு அளிக்குமாறு அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து தனியார் குடியிருப்பு மக்கள் அவிநாசி காவல் நிலையத்தில் இதுகுறித்து மனு அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கூட்டணிக் கட்சிகளுக்காக தேர்தல் பணியாற்றாத விசிகவினர்: தொல் திருமாவளவன்

மே நாள் விடுமுறை அளிக்காத 110 நிறுவனங்கள் மீது நடவடிக்கை!
150 முதல் 200 இடங்களில் தவெக வெற்றி: செங்கோட்டையன் நம்பிக்கை

புறநகர் சென்னையை மிரட்டும் கோடை வெய்யில்! இது வெறும் ஆரம்பம்தானா?
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

