
உயர் மின் கோபுர பாதை வளர்ச்சிக்கு அவசியம்: பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா
உயர் மின் கோபுர பாதை வளர்ச்சிக்கு அவசியம் என்று பல்லடத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.
உயர் மின் கோபுர பாதை வளர்ச்சிக்கு அவசியம் என்று பல்லடத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டப் பேரவை தொகுதி பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பல்லடத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரபேல் விமான கொள்முதலில் முறைகேடு ஏதும் நடைபெறவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஊழல் மிகுந்த கட்சி என்பது எல்லோருக்கும் தெரியும். அதே போல் தமிழகத்தில் திமுக என்றாலே ஊழல்தான் உடனே நினைவுக்கு வரும். சென்னை மாநகராட்சி துப்புரவு தினக்கூலி தொழிலாளர்களின் சம்பளத்தில் கூட ஊழல் செய்தது திமுகதான். சர்க்காரியா ஊழலை மக்கள் மறந்து விடமாட்டார்கள். இவர்கள் பிரதமர் மோடி மீது உண்மை இல்லாத குற்றச்சாட்டுகளைக் கூறி மக்களிடையே அதிருப்தியை உருவாக்க முயல்வது வெற்றிபெறாது. மக்களுக்கு எது உண்மை என்பது நன்கு புரியும். மோடி ஆட்சியில்தான் நாடு முழுவதும் மின் வெட்டு இல்லாமல் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
உயர் மின் கோபுர பாதை எனது விவசாய நிலத்தின் வழியாகதான் செல்கிறது. உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை சேமிக்க முடியாது. அதனை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் நாடு முன்னேற்றம் அடையும். இதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்தியாவை பிரிவினைவாதிகள் துண்டாட விடமாட்டோம். 5 மாநிலத் தேர்தலில் உள்ளூர் பிரச்னைகளால்தான் பாஜவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் மக்களவைத் தேர்தலில் மத்தியில் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு அம்மாநில மக்கள் ஆதரவு அளிப்பார்கள். அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும். ரஜினி இன்னும் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை. மக்களவைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பார் என்பது அவரது விருப்பம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





