தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் முன்னேற்றத்துக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம், காட்டூர் கிராமத்தில் மக்கள் குறைதீர் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி முன்னிலை வகித்தார். இதில், 22 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை உள்பட ரூ. 92,500 மதிப்புள்ள அரசின் நலத் திட்ட உதவிகளை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் எல்.முருகன் வழங்கினார்.
அதன் பின்னர் அவர் பேசியதாவது: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் நோக்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அரசின் திட்டங்களை கண்காணிக்கும் பணியாகும். இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, பொது கழிப்பறை, தனி நபர் கழிப்பறை கோரி மனுக்களை அளித்துள்ளனர். இதன் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். மக்களைத் தேடி சென்று குறைகளைக் கேட்கும் முகாம்கள் நடத்துவதன் மூலம் அவர்களின் குறைகளுக்குத் தீர்வுகாண முடிகிறது. மேலும், மத்திய, மாநில அரசின் நலத் திட்டங்களைப் பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து, தங்கள் தகுதிக்கேற்ப நலத் திட்ட உதவியைப் பெற்றுக்கொள்ளவும் முடிகிறது. தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் முன்னேற்றத்துக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து அவர் திருப்பூரில் உள்ள ஆதி திராவிடர் நலத் துறை மாணவியர் தங்கும் விடுதியைப் பார்வையிட்டார். மாநில ஆதி திராவிடர் நலக் குழு உறுப்பினர் செல்வகுமார், மாவட்ட ஆதி திராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் மகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு என்ன அதிகாரம் இருக்கு? - கனிமொழி கேள்வி | DMK | TVK

Ravindran Duraisamy Interview | அண்ணாமலை முடிவெடுக்க விஜய்தான் காரணம் | CM Vijay | TVK | Annamalai |

பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியாக விளையாடியது நம்பிக்கையளித்தது: ரிச்சா கோஷ்






