உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி சார்பில் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
தூய்மைப் பணியில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் உடுமலை அருகே உள்ள கணி யூரில் நடைபெற்ற இந்த முகாமை கல்லூரிச் செயலர் கெ.ரவீந்திரன் தொடங்கி வைத்தார்.
கல்லூரி முதல்வர் கி.புனிதவல்லி முன்னிலை வகித்தார். தமிழ்த் துறைத் தலைவர் ப.தமிழ்ப்பாவை முகாமின் சிறப் புகள் குறித்து பேசினார். உடுமலை வருவாய்க் கோட்டாட்சியர் எஸ்.அசோகன், மடத்துக்குளம் வட்டாட்சியர் பொ.கென்னடி, வெங்கடகிரு ஷ்ணா மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் என்.முரளி ஆகியோர் பேசினர். பின்னர், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.