திருப்பூரில் பின்னலாடைத் துணிக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸார் கூறியது:
திருப்பூர், நொய்யல் வீதியைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவர், பெரிய கடை வீதியில் சிறிய அளவில் இரண்டாம் தர பின்னலாடைத் துணி மற்றும் நூல் விற்பனை செய்யும் கிடங்கு வைத்துள்ளார். புதன்கிழமை பகலில் அவரது துணிக் கிடங்கில் தீப்பிடித்துள்ளது. அருகிலிருந்தவர்கள் பார்த்து உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருப்பூர் தெற்கு தீயணைப்புத் துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, தீ அருகிலுள்ள கடைகளுக்கு பரவும் முன்னர் அணைத்தனர். இந்தத் தீவிபத்தில் பல்லாயிரம் மதிப்புடைய துணியும் நூலும் எரிந்து சேதமடைந்தது. திருப்பூர் தெற்கு போலீஸார் விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.