வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சந்தைக்கு வரத்து அதிகரிப்பு: கோழிகள் விலை வீழ்ச்சி

குண்டடம் வாரச் சந்தையில் வரத்து அதிகரிப்பால் கோழிகளின் விலை வீழ்ச்சியடைந்தது.

Updated On :9 ஜூலை 2018, 1:57 am

குண்டடம் வாரச் சந்தையில் வரத்து அதிகரிப்பால் கோழிகளின் விலை வீழ்ச்சியடைந்தது.
 குண்டடத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் கூடும் வாரச் சந்தைக்கு சுற்றுவட்டார விவசாயிகள், வியாபாரிகள் ஆடுகள், கோழிகளைக் கொண்டுவருவது வழக்கம். ஆடுகள், கோழிகளை  மேச்சேரி, பொள்ளாச்சி, திருப்பூர், உடுமலை மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
  வழக்கமாக குண்டடம் சந்தைக்கு 1,500 முதல் 2,500 கோழிகள் விற்பனைக்குக் கொண்டுவரப்படும். இந்த வாரம் திடீரென 4,000 கோழிகள் வரை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. வரத்து அதிகரிப்பால் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது. கடந்த வாரம் கோழி கிலோ ரூ. 280 முதல் 350 வரை விலைபோனது. இந்த வாரம் ரூ.260 முதல் ரூ. 320 வரை மட்டுமே விலைபோனது. சண்டைச் சேவல்கள்  ரூ. 2,500 முதல் ரூ. 4,000 வரை விலைபோகும் நிலையில் இந்த வாரம் ரூ.1,500 முதல்  ரூ.2,000 வரைதான் விற்பனை ஆனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.