திருப்பூரில் காங்கயம் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் ராகிங் தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியும், மாநில சட்டப் பணிகள் குழுத் தலைவருமான குலுவாடி ஜி.ரமேஷ் பேசியதாவது:
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள அடிப்படை உரிமைகள் குறித்துத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இது நாளைய சமூகத்துக்கான விழிப்புணர்வாக இருக்கும். சுத்தமான குடிநீர், தரமான சாலை வசதிகளை செய்து தர வேண்டியது அரசின் கடமை. அதனை செய்யத் தவறும்பட்சத்தில் நீதிமன்றத்தின் மூலம் அரசாங்கத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். நாட்டில் உள்ள அடிப்படை சட்டங்களை அனைவரும் அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும்.
பள்ளி, கல்லூரிகளில் அடிப்படை சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்களை நடத்தும்போது மக்கள் அரசிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதும், அரசு மக்களிடம் என்ன எதிர்ப்பார்க்கிறது என்பதையும் அறிய முடியும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவெறும்பூா் தொகுதி - ‘ஹாட்ரிக்’ வெற்றிக்கு திமுக முயற்சி!

பவானி - தொடா்ந்து நான்காவது வெற்றியை எதிா்நோக்கும் அதிமுக!

அரசியல் பங்கேற்பை எளிதாக்கும் சமூக ஊடகங்கள்!

ஒட்டன்சத்திரம் - தொடா் சாதனை படைப்பாரா அர.சக்கரபாணி?
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

