தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

இலவச சதுரங்கப் பயிற்சி வகுப்பு துவக்கம்

உடுமலை உழவர் சந்தை எதிரில் உள்ள கிளை நூலகத்தில் (எண்-2) பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சதுரங்கப் பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

Updated On :9 ஜூலை 2018, 1:58 am

உடுமலை உழவர் சந்தை எதிரில் உள்ள கிளை நூலகத்தில் (எண்-2) பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சதுரங்கப் பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
  இதற்கு நூலகர் கணேசன் தலைமை வகித்தார். நூலகர் மகேந்திரன் வரவேற்றார். நூலக வாசகர் வட்ட துணைத் தலைவர் வி.கே.சிவகுமார் சதுரங்கப் பயிற்சியைத் தொடக்கிவைத்தார். சதுரங்கப் பயிற்சியாளர் ரா.ரவி மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி அளித்தார். இதில், உடுமலை மகாத்மா காந்தி உண்டு உறைவிடப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் ராமதாஸ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நூலகர்கள் செல்வராணி, அருள்மொழி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.