இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

உடுமலை அருகே ரேக்ளா போட்டி

உடுமலை அருகே பள்ளபாளையம் கிராமத்தில் ரேக்ளா போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஜூலை 2018, 1:57 am

உடுமலை அருகே பள்ளபாளையம் கிராமத்தில் ரேக்ளா போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ரேக்ளா போட்டிகளைத் தொடக்கிவைத்தார். இதில்,  மாவட்டம் 
முழுவதும் இருந்து 300க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன. 200 மீ., 300 மீ., என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் பங்கேற்று காளைகள் சீறிப்பாய்ந்து செல்வதை பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
  இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகள், கோப்பைகள் வழங்கப்ப ட்டன. பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி. மகேந்திரன்,  ஒன்றிய அதிமுக செயலாளர்கள் கே.ஆறுச்சாமி, ஆர்.ஜி.ஜெகநாதன், அதிமுக நிர்வாகிகள் பள்ளபாளையம் போகநாதன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.