நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு

மின்சாரம் பாய்ந்ததில் திருப்பூரில் இளைஞர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 

Updated On :9 ஜூலை 2018, 2:01 am

மின்சாரம் பாய்ந்ததில் திருப்பூரில் இளைஞர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், கிருஷ்ணாபுரம், ராஜா வீதியைச் சேர்ந்தவர் அன்பு மகன் தமிழ்கனி (19). இவர் திருப்பூர், தனலட்சுமி நகரில் தங்கி அங்குள்ள கிரில் பட்டறையில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.
குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தபோது தமிழ்கனி கதவு மீது வைத்திருந்த துணியை எடுக்க முயன்றுள்ளார். அப்போது, அருகிலுள்ள மின்கம்பியில் இருந்து பாய்ந்த மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்தார்.  அருகிலுள்ளவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து  திருப்பூர் மத்திய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.