இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ராகிங் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

திருப்பூரில் காங்கயம் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் ராகிங் தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

Updated On :9 ஜூலை 2018, 1:59 am

திருப்பூரில் காங்கயம் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் ராகிங் தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.
இதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியும், மாநில சட்டப் பணிகள் குழுத் தலைவருமான குலுவாடி ஜி.ரமேஷ் பேசியதாவது:
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள அடிப்படை உரிமைகள் குறித்துத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இது நாளைய சமூகத்துக்கான விழிப்புணர்வாக இருக்கும். சுத்தமான குடிநீர், தரமான சாலை வசதிகளை செய்து தர வேண்டியது அரசின் கடமை. அதனை செய்யத் தவறும்பட்சத்தில் நீதிமன்றத்தின் மூலம் அரசாங்கத்தின் மீது சட்ட  நடவடிக்கை எடுக்க முடியும். நாட்டில் உள்ள அடிப்படை சட்டங்களை அனைவரும் அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். 
பள்ளி, கல்லூரிகளில் அடிப்படை சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்களை நடத்தும்போது மக்கள் அரசிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதும், அரசு மக்களிடம் என்ன எதிர்ப்பார்க்கிறது என்பதையும் அறிய முடியும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.