துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ. 96.44 ஆக நிறைவு!சென்செக்ஸ் 443 புள்ளிகள் சரிவு; நிஃப்டி 24,250-க்குக் கீழே வர்த்தகம்!பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்திரிபுரா டிஜிபி அலுவலகத்திற்கு உள்ளேயே டிஜிபி மர்ம மரணம்! உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!
/

ஓம் பசுமை அங்காடி சார்பில் சிந்தனைப் பட்டிமன்றம்

திருப்பூரில் நடந்த சிந்தனைப் பட்டிமன்றத்தில் இலக்கியத்திலும், இதயத்திலும் முந்தி இருப்பது வீரமே என நாஞ்சில் சம்பத் பேசினார். 

Updated On :26 ஜூன் 2018, 7:26 am IST

திருப்பூரில் நடந்த சிந்தனைப் பட்டிமன்றத்தில் இலக்கியத்திலும், இதயத்திலும் முந்தி இருப்பது வீரமே என நாஞ்சில் சம்பத் பேசினார். 
திருப்பூர் ஓம் பசுமை அங்காடி, சைவ சித்தாந்த சபை, சேக்கிழார் அரங்கம்  சார்பில் இலக்கியத்திலும், இதயத்திலும் முந்தி நிற்பது கல்வியா? செல்வமா? வீரமா? என்ற தலைப்பில் சிந்தனைப் பட்டிமன்றம் திருமுருகன்பூண்டி திருமுருகநாதகோவில், மாணிக்கவாசகர் தமிழ் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஓம் பசுமை அங்காடி நிர்வாக இயக்குநர் உமாசங்கர் தலைமை வகித்தார். சாந்தி உமாசங்கர் முன்னிலை வகித்தார். நாஞ்சில் சம்பத் நடுவராக இருக்க, கல்விதான் என்ற தலைப்பில்  பேராசிரியர் சி.கணேசன், செல்வம் என்ற தலைப்பில் பேராசிரியர் மானசீகன், வீரம் என்ற தலைப்பில் பேராசிரியை மலர்விழி ஆகியோர் நாட்டு நடப்புகள், ராமாயணம், மகாபாரதம் உள்பட இதிகாசங்களில் நடந்த சம்பவங்களைக் குறிப்பிட்டு  வாதிட்டனர். 
இதைத் தொடர்ந்து நடுவர் நாஞ்சில் சம்பத், இலக்கியத்திலும், இதயத்திலும் முந்தி இருப்பது வீரமே என்று தீர்ப்பளித்தார்.  சைவ சிந்தாந்த சபைத் தலைவர் ஆறுமுகம் நன்றி கூறுகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.