ரோஹித் சர்மா சதம் வீண்! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா!திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

ஜெருசலேம் புனிதப் பயணம்: ரூ.20 ஆயிரம்  நிதி உதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஜெருசலேம் புனிதப்  பயணம் செல்ல தமிழக அரசின் ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன் பெற மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

Updated On :26 ஜூன் 2018, 7:25 am IST

ஜெருசலேம் புனிதப்  பயணம் செல்ல தமிழக அரசின் ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன் பெற மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை:
தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20,000  நிதி உதவி வழங்கப்படுகிறது. 
இந்த திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  
இப்புனிதப் பயணம் பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி,  கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறித்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும்  உள்ளடக்கியது.  
இப்புனித பயணம் ஜூலை 2018 முதல் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக் காலம் 10 நாள்கள் வரை இருக்கும்.  இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். 
விண்ணப்பப் படிவங்களை படியிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் "ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம்' என்று  குறிப்பிட்டு மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 807, (5வது தளம்), அண்ணாசாலை, சென்னை-600 002 என்ற முகவரிக்கு ஜூலை 6 வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணிக்குள் பெறப்படத்தக்க வகையில் அனுப்பப்பட வேண்டும். (நேரில் வரவேண்டியதில்லை). 
எனவே, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.