உடுமலை அருகே பிஏபி திட்டத்தின் கீழ் உள்ள 3 குளங்களில் வண்டல் மண் எடுத்துக் கொள்ள விவசாயிகளுக்கு திங்கள்கிழமை அனுமதி வழங்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள குளங்கள், உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை, அமராவதி அணை, உப்பாறு அணை, நல்ல தங்காள் ஓடை உள்ளிட்ட நீர் நிலைகளில் கடந்த ஆண்டு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது நீர் நிலைகளில் இருந்து இலவசமாக வண்டல் மண் எடுத்துக் கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட் டது. இதேபோல் இந்த ஆண்டும் நீர் நிலைகளில் வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் உடுமலையை அடுத்து அமைந்துள்ள கரிசல்குளம், வளையபாளையம் குளம் மற்றும் பெரியகுளம் ஆகிய குளங்களை தூர் வாரவும், அதில் உள்ள வண்டல் மண்ணை எடுத்து உபயோகித்துக் கொள்ளவும் விவசாயிகளுக்கு வருவாய்த் துறை திங்கள்கிழமை அனுமதி வழங்கியது.
இதுகுறித்து உடுமலை வட்டாட்சியர் தங்கவேல் கூறியது:
கரிசல்குளம், வளையபாளையம் குளம் மற்றும் பெரியகுளம் ஆகிய குளங்களில் வண்டல் மண்ணை இலவசமாக விவசாயிகளே அவரவர் சொந்த செலவில் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபோக இதே பகுதிகளில் உள்ள மற்ற குளங்கள் மற்றும் திருமூர்த்தி அணை, அமராவதி அணை ஆகியற்றிலும் வண்டல் மண் எடுத்துக் கொள்ள விவசாயிகள் அனுமதி கோரியுள்ளனர். இது பரிசீலனையில் உள்ளது. விரைவில் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்! இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!

தனுஷ் நடித்த ஓம் திரைப்படத்தின் முதல் பாடல் புரோமோ!
நியூயார்க் மேயர் வெறுப்பைப் பரப்புகிறார்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
விடியோக்கள்

தலைமைச் செயலகம் இடமாற்றம் எப்போது?| Tamil Nadu Secretariat | Fort St. George |TN Assembly | TVK Government | CM Vijay


