திருப்பூர் மாவட்டத்தில் நாளை மக்களைத் தேடி வருவாய்த் திட்ட முகாம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வருவாய் கிராமங்களில் மக்களைத் தேடி வருவாய்த் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வருவாய் கிராமங்களில் மக்களைத் தேடி வருவாய்த் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
திருப்பூர் வடக்கு தாலுகாவில்,  தொட்டிபாளையம் காதர்பேட்டை நிலவள வங்கி வளாகம், திருப்பூர் தெற்கில் உகாயனூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்,  அவிநாசி தாலுகாவில் தொரவலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகம்,  ஊத்துக்குளி தாலுகாவில் தென்முகம்காங்கயம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகம்,  பல்லடம் தாலுகாவில் எலவந்தி இ-சேவை மையம்,  தாராபுரம் தாலுகாவில் பொன்னாபுரம் இ-சேவை மையம்,  காங்கயம் தாலுகாவில் ராசாத்தாவலசு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், உடுமலை தாலுகாவில் பெரியவாளவாடி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி வளாகம், மடத்துக்குளம் தாலுகாவில் கொமரலிங்கம் கிழக்கு சமுதாய நலக் கூடம் ஆகிய இடங்களில், வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 2) காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இம்முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாம்களில்,  அந்தந்த கிராமத்தை சேர்ந்த மக்கள்,  தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து தீர்வு பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com