பல்லடத்தில் விசைத்தறியாளர்கள், விவசாயிகள் தனியார் வங்கியை புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
பல்லடம், ராசாகவுண்டம்பாளையத்தை சேர்ந்த இளங்கோவன், சக்திவேல் ஆகியோர் பல்லடத்தில் உள்ள தனியார் வங்கிக் கிளையில் விசைத்தறிக் கூடம் அமைக்க கடனுதவி பெற்றுள்ளனர். இளங்கோவன் ரூ. 48 லட்சம் கடன் பெற்று 7 மாதம் தவணைத் தொகையை செலுத்தியுள்ளார். சக்திவேல் ரூ. 37 லட்சம் பெற்று 9 மாதம் தவணைத் தொகை செலுத்தி உள்ளார்.
விசைத்தறி தொழில் நலிவடைந்ததால் தொடர்ந்து மாதத் தவணைத் தொகை செலுத்த முடியாத நிலைக்கு இருவரும் தள்ளப்பட்டுள்ளனர். இளங்கோவன் தவணை மற்றும் வட்டியாக ரூ. 53 லட்சத்து 44 ஆயிரமும், சக்திவேல் ரூ. 48
லட்சத்து ஆயிரமும் செலுத்த வேண்டும் என்று வங்கி தரப்பில் கூறப்பட்டது. தொகையை செலுத்த முடியாததால் கடன் வசூல் தீர்ப்பாய நடவடிக்கையாக இருவரின் சொத்துகளைப் புதன்கிழமை பொது ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஏலத்தை நிறுத்தக் கோரி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில செயல் தலைவர் என்.எஸ்.பி.வெற்றி, திருப்பூர்,
கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் அப்புக்குட்டி ஆகியோர் தலைமையில் விவசாயிகள்,விசைத்தறியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பல்லடம் தனியார் வங்கிக் கிளை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, வங்கி நிர்வாகம் ஏலத்தை தாற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகத் தெரிவித்தது. அதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”நா மாட்டிக்கிட்டேன்னு இவ்ளோ கேள்வியா?” செய்தியாளர்களுக்கு பதிலளித்த ஆனந்த்! | TVK

பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!

புரசைவாக்கம் செல்லாமல் திரும்பிய விஜய்! பிரசாரம் பாதியில் ரத்து!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 93.15! 20 காசுகள் உயர்வு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை

