தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

மானியத்துடன் பால் பண்ணை அமைக்க அழைப்பு

மானியத்துடன் பால் பண்ணை அமைக்க விரும்புவோர் மே 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி:

Updated On :30 ஜனவரி 2024, 6:37 pm IST

மானியத்துடன் பால் பண்ணை அமைக்க விரும்புவோர் மே 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி:
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் இலவச வெள்ளாடு வழங்கும் திட்டம், இலவச கறவை மாடு வழங்கும் திட்டம், தீவன அபிவிருத்தித் திட்டம், கோமாரி நோய் தடுப்பூசித் திட்டம் என பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
இதேபோல கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் புதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறிய அளவிலான மூன்று பால் பண்ணைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ. 5 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும் பால் பண்ணைக்கு 25 சதவீதம் மானியமாக ரூ. 1.25 லட்சம் அரசு மானியம் வழங்கப்படும். ரூ. 3.75 லட்சம் பயனாளியின் பங்களிப்பாகச் செலுத்த வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்புவோர் கொட்டகை அமைக்க, குறைந்தபட்சம் 300 ச.அடி நிலமும், தீவனப் புல் வளர்க்க பாசன வசதியுடன் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலத்தை சொந்தமாகவோ அல்லது ஒப்பந்த இடமாகவோ வைத்திருக்க வேண்டும். கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவங்களில் பெயர், இனம், வயது, சமூகப் பிரிவு, முகவரி, ஆதார் எண், செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், இருப்பிடச் சான்று, ஆளறிச் சான்று, நில உரிமைச் சான்று, வங்கிக் கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். தகுதியானவர்கள், அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவர்களிடம் மே 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பால் பண்ணை மூலம் உற்பத்தி செய்யப்படும் பாலை கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் மட்டுமே விற்க வேண்டும். மொத்த ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினருக்கு 30 சதவீதம் ஒதுக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.