எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

முருங்கைக்காய் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

வெள்ளக்கோவிலில் முருங்கைக்காய் விலை கடந்த பல மாதங்களுக்குப் பிறகு நூறு சதவீத விலை ஏற்றம் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On :5 நவம்பர் 2018, 7:44 am IST

வெள்ளக்கோவிலில் முருங்கைக்காய் விலை கடந்த பல மாதங்களுக்குப் பிறகு நூறு சதவீத விலை ஏற்றம் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் தனியார் கொள்முதல் நிலையங்களில் முருங்கைக்காய்கள் வாங்கப்படுகின்றன. தற்போது பூக்கும் பருவமாக இருப்பதால் பெரும்பாலான முருங்கை மரங்களில் காய்கள் கிடையாது.
இதனால், கடந்த சில வாரங்களாக படிப்படியாக வரத்து குறைந்து வருகிறது. கடந்த வாரம் 11 டன் வரத்து இருந்த நிலையில் இந்த வாரம் 5 டன் மட்டுமே கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டுவரப்பட்டன.மேலும், தீபாவளி பண்டிகை,  சுப விசேஷங்கள் காரணமாக முருங்கைக்காய் தேவை அதிகரித்துள்ளது.
இதனால் செடி முருங்கைக்காய் கிலோ ரூ. 40, மர முருங்கைக்காய் ரூ.35,  கரும்பு முருங்கைக்காய் ரூ. 60  என விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. இது கடந்த வாரத்தை விட நூறு சதவீத விலை உயர்வாகும். 
கடந்த பல மாதங்களுக்குப் பிறகு அதிக விலை கிடைத்ததால் முருங்கை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.