சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

வெள்ளக்கோவில் சந்தைக்கு 10 டன் முருங்கைக்காய் வரத்து

வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் கொள்முதல் நிலையங்களுக்கு இந்த வாரம் 10 டன் முருங்கைக்காய் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன.

Updated On :22 அக்டோபர் 2018, 2:30 am

வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் கொள்முதல் நிலையங்களுக்கு இந்த வாரம் 10 டன் முருங்கைக்காய் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன.
வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் கொள்முதல் நிலையங்களில் வாரந்தோறும் முருங்கைக்காய்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்காக இங்கு கொண்டு வருகின்றனர்.
கடந்த வாரம் 12 டன் அளவுக்கு வரத்து இருந்தது. இந்த வாரம் வரத்து குறைந்து 10 டன் அளவுக்கு மட்டுமே 
முருங்கைக்காய்கள் கொண்டுவரப்பட்டிருந்தன.  இதனால், விலை கிலோவுக்கு ரூ.5 அதிகரித்து மர முருங்கைக்காய் கிலோ ரூ. 20க்கும், செடி முருங்கைக்காய் ரூ. 40க்கும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டன.
தற்போது, திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும் நிலையில் முருங்கைக்காய் தேவை அதிகரித்துள்ளதாகவும், வரும் வாரத்தில் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.