மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

செப்டம்பர் 3 மின்தடை:  பழையகோட்டை, காடையூர்

Updated On :3 செப்டம்பர் 2018, 2:08 am

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட பழையகோட்டை, காடையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை காலை 9 முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளர் என்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
மின்நிறுத்தம் செய்யப்படும் பழையகோட்டை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகள்:
பழையகோட்டை, நத்தக்காடையூர், மருதுறை, முள்ளிபுரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம், கண்ணம்மாபுரம்.
காடையூர் துணை மின் நிலையம்: காடையூர், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூர், பசுவமூப்பன் வலசு, சடையபாளையம், சம்பந்தம்பாளையம், மேட்டுப்பாறை, பொன்னாங்காளிவலசு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.