மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தாராபுரம் நகரக் கூட்டுறவு வங்கித் தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

தாராபுரம் நகரக் கூட்டுறவு வங்கிக்கு இயக்குநர்களைத் தேர்வு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெறுகிறது.

Updated On :3 செப்டம்பர் 2018, 2:07 am

தாராபுரம் நகரக் கூட்டுறவு வங்கிக்கு இயக்குநர்களைத் தேர்வு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெறுகிறது.
இந்த வங்கிக்கு மொத்தம் 11 இயக்குநர்களைத் தேர்வு செய்ய இரண்டு முறை தேர்தல் அறிவிக்கப்பட்டு, பின்னர் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 27ஆம் தேதி வேட்பு மனுக்கள் பெறப்பட்டு சனிக்கிழமை தேர்தல் நடத்தப்பட்டது.
இதில், திமுக சார்பில் 3 பேரும், அதிமுக சார்பில் 8 பேரும், போட்டி அதிமுக சார்பில் 3 பேரும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் 7 பேரும் என 21 பேர் போட்டியிட்டனர்.
மொத்தம் 7 ஆயிரத்து 8 பேரை வாக்காளர்களாக கொண்ட இந்த வங்கித் தேர்தலில் 1,679 பேர் மட்டுமே வாக்களித்தனர்.
வாக்குப் பெட்டிகள் அனைத்தும் காவல் துறையினர் பாதுகாப்புடன் நகரக் கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.