மக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!
/

ஊரக வளர்ச்சித் துறை  திட்டப் பணிகள்: அவிநாசி ஒன்றியத்தில் ஆட்சியர் ஆய்வு

அவிநாசி ஊராட்சி ஒன்றியம், புதுப்பாளையம், தெக்கலூர் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூ. 26 லட்சம்

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

அவிநாசி ஊராட்சி ஒன்றியம், புதுப்பாளையம், தெக்கலூர் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூ. 26 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி புதன்கிழமை ஆய்வு செய்தார்.
புதுப்பாளையம் ஊராட்சி, வஞ்சிபாளையத்தில் அரசு  துவக்கப் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணி, வெங்கமேடு ரத்தினசாமி நகரில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி, தெக்கலூர் ஊராட்சி, சின்னியம்பாளையம் முதல் திம்மணியம்பாளையம் வரை சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி எனஅவிநாசி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ. 25.99 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர்ஆய்வு செய்தார். 
இந்த வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைவாக முடிக்குமாறும், ஊராட்சிப் பகுதிகளில் டெங்கு கொசுப் பெருக்கத்தைத் தடுக்கும் வகையில் தூய்மைப் பணி மேற்கொள்ளுமாறும்  அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். தெக்கலூர் அரசு துவக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவையும், பள்ளிக் கழிப்பறைகளையும் அவர் பார்வையிட்டார். 
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பாலசுப்பிரமணியம், உதவி திட்ட அலுவலர் கிரி, அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனாட்சி,  சாந்தி லட்சுமி உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.