பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

காங்கயம் அரசு மருத்துவமனையில் சுகாதாரச் சீர்கேடு: நோயாளிகள் அவதி

காங்கயம் அரசு மருத்துவமனையில் நிலவும் சுகாதாரச் சீர்கேட்டால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Updated On :23 ஜனவரி 2019, 9:43 am IST

காங்கயம் அரசு மருத்துவமனையில் நிலவும் சுகாதாரச் சீர்கேட்டால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
காங்கயம் பேருந்து நிலையம் எதிரே உள்ள அரசு மருத்துவமனையில் காங்கயம், அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதி மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில்,  அரசு மருத்துவமனையில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருவதாக நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து உள்நோயாளியாக சிகிச்சை பெற்ற எஸ்.சங்கர்கணேஷ் கூறியதாவது :
தொட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த நான் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினேன். மருத்துவமனையில் சுகாதார வசதி இல்லை. இங்குள்ள கழிப்பறையைப் பயன்படுத்த முடியாத அளவுக்கு அசுத்தமாக உள்ளது. 
இதனால், ஏற்படும் துர்நாற்றம் காரணமாக மருத்துவமனைக்குள் அமர்ந்து நோயாளிகளால் சாப்பிடக்கூட முடியவில்லை. செவிலியர்கள், பணியாளர்கள் நோயாளிகளை மரியாதை இல்லாமல் பேசி வருகின்றனர். 
வயதானவருக்கு கை நரம்பில் ஊசி போடும்போது ரத்தம் தரையில் சிந்தியது. தரையில் சிந்திய ரத்தத்தை சுத்தம் செய்யவில்லை. நோயாளிகள் ரத்தத்தை மிதித்துக் கொண்டு சென்றனர் என்றார்.
மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் விசாரணை நடத்தி காங்கயம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்தைப் பேணுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் வலியுறுத்தி உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.