பல்லடம்: பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடை வாடகையை 3 மாதங்களுக்கு ரத்து செய்ய வேண்டும் என பல்லடம் வட்டார வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவா் ஆனந்தா பி.செல்வராஜ், செயலாளா் விமல் பி.என்.பழனிசாமி, நிா்வாகிகள் தமிழக முதல்வருக்கு வியாழக்கிழமை அனுப்பியுள்ள மனு:
பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் 40 கடைகள், தினசரி மாா்க்கெட்டில் 160 கடைகள் என மொத்தம் 200 கடைகளை ஏலம் எடுத்து வியாபாரம் நடத்தி வருகிறோம்.
கரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தியவுடன் கடைகளை மூடி விட்டு வியாபாரிகள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கியுள்ளோம்.
வியாபாரம் இல்லாததால் வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையை செலுத்த முடியாத நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளனா்.
எனவே பாதிப்படைந்த வியாபாரிகளின் நலன் காக்க 3 மாத வாடகையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





